ஐசிசி-யின் ஒருநாள் தரவரிசையில் முதல் இடம் பிடித்த இலங்கை வீரர்!

ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் பந்து வீச்சாளர்களின் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டு, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர்கள் 2 பேர் டாப் 10-ல் உள்ளனர். இதில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3-வது இடத்தில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் 10-வது இடத்தில் உள்ளனர்.

நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் 5 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *