Advertisements

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளை சேர்ந்த சுமார் 2 கோடி பெண்கள் மீது தலா பதினைந்தாயிரம் ரூபாய் பண மழை கொட்ட போகிறது என்கிறது. வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி தான் என்பதில் முதல்வர் மு க ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் .
இல்லை மெகா கூட்டணி அமைப்பதன் மூலம் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது பாருங்கள் என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
தமிழ்நாட்டை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன் என்று சவால் விடுகிறார் பாஜக தரப்பிலான உள்துறை அமைச்சர் அமித்ஷா.
நீங்கள் என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் காசு பணம் துட்டு மணி தான் வாக்காளர் மத்தியில் பேசும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் .
அந்த வகையில் தமிழக அரசியல் கட்சிகள் தலா ஒரு தொகுதிக்கு 15 கோடி முதல் 20 கோடி ரூபாய் வரை செலவிடுவதற்கு தயாராகி வருகிறார்கள். திமுக தரப்பில், ஏற்கனவே ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 20 கோடி ரூபாய் அனுப்பப்பட்டு முக்கிய இடங்களில் மறைக்கப்பட்டு இருப்பதாக நைனார் நாகேந்திரன் தகவல் தெரிவித்திருக்கிறார். அந்த இடங்கள் தனக்கு தெரியும் நேரம் வரும் பொழுது தேர்தல் கமிஷனிடம் சொல்ல போகிறேன் என்று மிரட்டி வருகிறார் .
திமுகவை பொருத்தவரையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது . கடந்த தேர்தலில் திமுக தரப்பிலான அறிக்கை தான் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது . திமுக தேர்தல் வாக்குறுதிகளில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் என்ற திட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது . எனவே அந்த திட்டத்தை விரிவாக்கம் செய்து பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை தயாராகி வருவதாக சொல்கிறார்கள் .
அதேசமயம் திமுக அறிவித்த மகளிர் உதவி தொகை திட்டம் இந்தியா முழுவதும் தேர்தல் அறிக்கைகளில் முக்கிய இடம்பெறுகிறது. அந்த வகையில் மகளிர் உதவித் தொகை என்பது தவிர்க்க முடியாத திட்டம் ஆகிவிட்டது . எனவே அதிமுக தரப்பில் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் தரும் வகையில் அறிக்கை தயாராகி வருவதாக சொல்கிறார்கள் . இதற்கிடையே வருகிற பொங்கலுக்கே திமுக தரப்பில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 3000 ரூபாய் ரொக்க பணம் தரப்போவதாக சொல்கிறார்கள் .
அதாவது, பொங்கலை ஒட்டி ஒவ்வொரு குடும்ப ரேஷன் கார்டுக்கும் 3000 ரூபாய் ரொக்க பணம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த ரொக்க பணம் , பொங்கல் நெருங்கி வரும் சமயத்தில் ஐந்தாயிரம் ரூபாயாக ஒரு மாத கூடும் என்றும் சொல்கிறார்கள். அதாவது ஒரு ரேஷன் கார்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கமாக கொடுக்கலாமா என்றும் ஆலோசனை நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள்.
இது மட்டுமல்ல வழக்கமாக பொங்கல் திருவிழாவை டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர் எல். முருகன் வீட்டில் கொண்டாடும் பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்த முறை தமிழகம் வருகிறார் .அவர் தமிழக மக்களோடு சேர்ந்து பொங்கல் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே வடமாநிலங்களை கைப்பற்றி விட்ட நிலையில் பாரதிய ஜனதா கட்சியால் தமிழ்நாட்டை கைப்பற்ற முடியாத சூழ்நிலை இருக்கிறது .
சமீபத்தில் கூட உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து ஒரு உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பப்பட்டு இருக்கிறது . அதில் தமிழ்நாடு நீங்கள் நினைப்பது போல் அல்ல அவ்வளவு எளிதில் இங்கு ஆட்சியை கைப்பற்றி விட முடியாது. திமுக மிகவும் பலமாக இருக்கிறது. அதை விட்டால் அடுத்தபடியாக அதிமுகவுக்கு ஓட்டு வங்கி இருக்கிறது . எனவே பாரதிய ஜனதா கட்சி இங்கு கால் ஊன்றுவது மிகப்பெரிய சிரமம் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மிரட்டும் வண்ணம் ஒரு ரிப்போர்ட் அனுப்பப்பட்டு இருக்கிறது .
அந்த அறிக்கையை பார்வையிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா மிகவும் சோர்ந்து போய் விட்டாராம். அதிமுக கூட்டணியை பலப்படுத்தி என்னவெல்லாம் திட்டம் போட்டாலும் ஒன்றும் பலிக்கவில்லை. அதேசமயம் தமிழ்நாட்டு மக்களை புரிந்து கொள்ளவும் முடியவில்லை என திண்டாடிய நிலைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தள்ளப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் டெல்லியில் மிகவும் அறிவு சார்ந்த தேர்தல் வியூகத்தை கணிக்க கூடிய பலர் பாஜகவுக்கு புதிய ஆலோசனைகள் தெரிவித்துள்ளனர்.
[
அதன்படி பெண்கள் வங்கி கணக்குக்கு பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் செய்யும் திட்டம் வரப்போவதாக சொல்கிறார்கள் . முன்னதாக பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதல்வரின் மகளிர் வேலை வாய்ப்பு திட்டம் என ஒரு திட்டத்தை அறிவித்து அதில் பெண்கள் சுய தொழில் செய்வதற்காக சுமார் 75 லட்சம் பெண்களை தேர்வு செய்து அவர்களது வங்கி கணக்குகளில் தேர்தலுக்கு முன்பாகவே தலா பத்தாயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. அந்த தேர்தலில் ஆளும் கூட்டணி எதிர்பார்த்ததை விட கூடுதலான இடங்களை பிடித்து ஆட்சியை தக்க வைப்பதற்கு இது முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது .
இதை மனதில் வைத்து தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பீகாரரைப் போல அனைத்து பெண்களுக்கும் சுயதொழில் தொடங்குவதற்காக தலா ரூ. 10,000 வழங்குவோம் என்ற அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சி வெளியிட இருக்கிறது . தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை விரட்டி அடித்து எப்படியும் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டுமென பாரதிய ஜனதா கட்சி சார்பில் அதிரடி திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன .
பாரதிய ஜனதா கட்சியை பொறுத்த வரையில் வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் எத்தனை கோடி ரூபாய் செலவானாலும் பரவாயில்லை நாங்கள் செலவு செய்கிறோம் என அதானி குழுமம் முன் வந்திருப்பதாக சொல்கிறார்கள் . அதானி குழுமம் என்பது குஜராத் மாநிலம் அகமதாபாத்தை தலைமை இடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனம் ஆகும். இதன் நிறுவனரான கௌதம் அதானி சம்பளம் மட்டும் மாதம் 10 கோடி ரூபாய் ஆகும். கடந்த 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறது.
தற்பொழுது இந்த குடும்பத்துக்கு சொந்தமாக 5 லட்சம் கோடி ரூபாய் பணம் இருப்பதாக சொல்லுகிறார்கள் . அதானி குடும்பம் என்பது பிரதமர் மோடி மூலம் ஏராளமான ஒப்பந்தங்களை செய்து உலக அளவில் வர்த்தகம் செய்து வருவதாகவும் சொல்கிறார்கள் . கடந்த மாதத்திற்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் அனைத்து பத்திரிகைகளிலும் இந்த செய்தி வெளியானது . ஆனால் அந்த சமயத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் அதானியையும் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த விவகாரம் வெளியே தெரியவில்லை..
உள்துறை அமைச்சர் அமித்ஷா அதானி எடப்பாடி பழனிச்சாமி ஆகிய மூவரும் சேர்ந்து பேசும்பொழுதுதான் தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் என அதானி வாக்குறுதி கொடுத்திருக்கிறார் என்பது திரை மறைவு செய்தியாகும். எனவே பாரதிய ஜனதா கட்சி சார்பில் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு செலவு செய்வதில் பணப் பிரச்சனை எதுவும் இருக்காது என்று சொல்கிறார்கள் .
ஆக மொத்தத்தில் கூட்டி கழித்து கணக்கு பார்த்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்கள் பெயரிலும் சுமார் 15,000 ரூபாய் தேர்தலை ஒட்டி வரவு வைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது . இதன் பிறகு வெற்றி பெறும் கட்சி சார்பில் அவர்கள் கொடுத்த வாக்குறுதியின் படி மாதா மாதம் ஒரு தொகையும் பெண்களுக்கு கிடைக்கும் என்பது உறுதியான தகவலாகும்.
Advertisements


