Wayanad Landslides:2 ஆயிரம் கோடி கொடுத்தே ஆகணும்; மத்திய அரசிடம் மல்லுக்கட்டும் கேரளா!

Advertisements

திருவனந்தபுரம்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்காக மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கேரளா அரசு வலியுறுத்தி உள்ளது.

கடந்த ஜூன் 30ம் தேதி கேரளாவில் வயநாட்டில், முண்டக்கை, சூரல்மலை ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்தது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாடு மக்களுக்கு இன்று (ஆகஸ்ட் 10) நேரில் சென்று, பிரதமர் மோடி ஆறுதல் கூற உள்ளார்.

ரூ.2 ஆயிரம் கோடி தாருங்கள்!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில், மத்திய அமைச்சரவை குழு ஆய்வு செய்தது. அப்போது மத்திய அமைச்சரவை குழுவைச் சந்தித்து, நிவாரண பணிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் எனக் கேரள அரசின் அமைச்சரவை குழு வலியுறுத்தி உள்ளது. வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராகப் பிரதமர் மோடி அறிவிப்பார்’ எனக் காங்கிரஸ் எம்.பி ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *