வேங்கைவாசல் மக்களுக்கு நற்செய்தி..!

சென்னை அருகே வேங்கை வாசல் முதல்நிலை ஊராட்சியில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.

புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றியம் வேங்கை வாசல் முதல்நிலை ஊராட்சியில் ஒரு கோடியே 28 இலட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வேங்கைவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் கலந்துகொண்டு திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் புனித தோமையார் மலை ஒன்றியத் திமுக செயலாளர் வெங்கடேசன், ஊராட்சி ஒன்றியத் தலைவர் சங்கீதா பாரதிராஜன், வேங்கைவாசல் ஊராட்சி மன்றத் தலைவர்  ஜெயச்சந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *