உயர்தர சிகிச்சை இனி உள்ளூரிலேயே..!

மயிலாடுதுறை மாவட்டத் தலைமை மருத்துவமனையில் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கூடுதல் கட்டடத்தை முதலமைச்சர் காணொலி வாயிலாகத்  திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 மேல்தளங்களுடன் கூடிய கூடுதல் கட்டடத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதாமுருகன் ஆகியோர்  கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்துப் பார்வையிட்டனர். மருத்துவமனையில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள பொதுமக்கள், மாவட்ட மருத்துவமனைக்கு உண்டான போதிய மருத்துவர்களையும், செவிலியர்களையும் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *