கூட்டணி ஆட்சியே தமிழ்நாட்டிற்குத் தீர்வு..!

Advertisements

தமிழ்நாட்டில் புரட்சியும் மாற்றமும் ஏற்பட வேண்டும் என்றும், அது கூட்டணி ஆட்சியால் தான் நிகழும் என்றும் புதிய தமிழகம் கட்சித் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

அருப்புக்கோட்டையில் புதிய தமிழகம் கட்சி விருதுநகர் மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு வரும் சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்துக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, 2021 சட்டமன்றத் தேர்தலில் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட உறுதிமொழிகளைக் கூறிய திமுக, அவற்றில் ஐந்தாறு வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு மற்ற அனைத்தையும் நிறைவேற்றவில்லை என்று கூறினார். வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு புரட்சியும் மாற்றமும் ஏற்பட வேண்டும் என்றும், அது கூட்டணி ஆட்சியால்தான் அது நிகழும் என்றும் கிருஷ்ணசாமி கூறினார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *