வைபவ் சூர்யவன்ஷியின் ருத்ரதாண்டவம்..!

16 ஆவது இளையோர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஜிம்பாபேவில், 16 ஆவது இளையோர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின், இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் எடுத்தது.
மிகவும் சிறப்பாகவும், அதிரடியாகவும் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 175 ரன்களை குவித்தார். இதையடுத்து,  412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 40 ஓவரில் 311 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது.
இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 6 ஆவது முறையாக இளையோர் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *