
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல்வாதி எனக் கூறிய பாஜகவுடன் கூட்டணி வைக்கலாமா என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருத்தகை எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருத்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிகாரில் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நாடு முழுவதும் வாக்குத் திருட்டை விரைவாக எடுத்துச் செல்ல வேண்டும்.
வீடுகளிலும் கையெழுத்து இயக்கம் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல்வாதி சிறைதண்டனை பெற்றவர் என்றெல்லாம் பாஜகவினர் தெரிவித்தனர் அவர்களுடன் கூட்டணி வைக்கலாமா என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். மேலும், எடப்பாடி பழனிச்சாமி முதலில் அதிமுகவிற்கு அவர் விசுவாசமாக இருக்கட்டும் அதன் பிறகு பேசட்டும் எனக் கூறினார்.
விடுதலை சிறுத்தை கட்சிகள் தலித் இயக்கமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், விசிக ஆரம்பிக்கப்பட்டது தலித் இயக்கமாக தான் ஆரம்பிக்கப்பட்டது . அது ஒரு பரிணாம வளர்ச்சி பெற்று எல்லாருக்குமான கட்சியாக அந்த கட்சியின் தலைவர் நினைத்து கொண்டு செல்கிறார் என்று தெரிவித்தார்.


