சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை இழந்த தவெக அரசு – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைத் தவெக அரசு காற்றில் பறக்க விட்டுவிட்டதாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைத் தவெக அரசு காற்றில் பறக்க விட்டுவிட்டதாகவும், தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? என்று வினவியுள்ளார்.

 

தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்துக் கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருப்பதாகவும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்சினை இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *