பெண்களைக் காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் விஜய்? – நயினார் கேள்வி!

தவெக கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைக் காக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் எந்தப் படையை அமைக்கப் போகிறார்? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாக,  தவெகவின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது, இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

பாதிக்கப்பட்ட பெண் பலமுறை புகார் அளித்தும், இதுவரை விஜய் மோகன் கைது செய்யப்படவில்லை என்று வெளியாகியுள்ள தகவல், தமிழகக் காவல்துறையின் நேர்மையின் மீதும், முதல்-அமைச்சரின் நிர்வாகத் திறன் மீதும் கடும் சந்தேகம் எழுப்பியுள்ளதாகக் கூறியுள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய தவெக நிர்வாகி விஜய் மோகன் மீது உடனடியாக சட்டரீதியான மற்றும் கட்சி ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

தனது கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைக் காக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் எந்தப் படையை அமைக்கப் போகிறார்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *