ஈரான் மீது ராணுவத் தாக்குதலை ஏவப்போவதாக டிரம்ப் மிரட்டல்.!

ஈரான் அரசு அணுசக்தி விவகாரத்தில் புதிய ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், மிகக் கடுமையான ராணுவத் தாக்குதலைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் வலைதளப் பதிவில், வெனிசுலாவில் பணி முடிந்தது போல் ஈரானிலும் விரைவாகச் செயல்பட அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது.

தொடர்ந்து, அணு ஆயுதங்களைத் தவிர்த்து, அனைவருக்கும் நன்மை பயக்கும் நியாயமான ஒப்பந்தத்திற்கு ஈரான் வர வேண்டும் என்றும், இல்லையெனில் அடுத்த தாக்குதல் மிகவும் மோசமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், வெனிசுலாவில் நடத்திய ராணுவ தாக்குதலை விட பெரிய அளவிலான, ஆபிரகாம் லிங்கன் என்ற பெயர் கொண்ட பிரம்மாண்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பல், மிகுந்த வலிமையுடனும் வேகத்துடனும் ஈரானை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *