குரூப்-1 பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்!

Advertisements

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி 1 பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி 1 பணிகளுக்கு 78 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். துணை ஆட்சியர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதேபோல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், தலைமைச் செயலாளர் சாய்குமார், துறைச் செயலர்கள் கலந்துகொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *