“விசிகவை துரோகியாக சித்தரிக்க முயற்சி” – திருமாவளவன்!

விசிக துரோகம் செய்துவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்கின்றனர் என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான் என்றும், மின்வெட்டு பிரச்சனையை சீர்செய்ய தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.  அதிகாரிகள் கூறுவதைக் கேட்டு தான் அமைச்சர்கள் பதிலளித்து கொண்டிருப்பதாகவும் எனவே, அதிகாரிகள் உண்மை தகவலைக் கூற வேண்டும் என்று கூறினார்.  திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் அவதூறாக பேசுவது தவறு என்று தெரிவித்தார்.
விசிக துரோகம் செய்துவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்கின்றனர் என்று குற்றம்சாட்டினார். மேலும்,  பதவிக்காக விசிக கூட்டணி மாறியதாக திமுக ஆதரவாளர்கள் பேசுகின்றனர் என்றும் சாடினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியாக வேண்டும் என்று தெரிவித்தார். பேருந்துகளுக்கு தவெக கொடி நிறத்தில் வண்ணம் பூசுவது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *