பேரறிஞர் அண்ணாவின் 118ஆவது பிறந்தநாளையொட்டி, அண்ணா சாலையில் அவரது உருவப் படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்குக் கீழே வைக்கப்பட்டுள்ளப் படத்திற்குத் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரன், அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன், அருண்ராஜ், பிரபு, வன்னியரசு, பார்த்திபன், குமார் ஆகியோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

