ஆசிய கோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..

ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தானை வென்றது.

ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொ__டரின் ஆறாவது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில், முதலில் ஆடிய பாகிஸ்தான் இருபது ஓவரில் ஒன்பது விக்கெட்டுக்கு127 ரன்கள் எடுத்தது. பர்ஹான் 40 ரன்னும், ஷாஹின் அப்ரிடி 33 ரன்னும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்களையும், பும்ரா, அக்சர் படேல் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர். இதனையடுத்து, ஆடிய இந்திய அணி அபிஷேக் சர்மா 31 ரன்களும், திலக் வர்மா 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 47 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் ஆட்ட நேரமுடிவில், இந்தியா 15 ஓவரில் மூன்று விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து இந்தியா அபார வெற்றி பெற்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *