அம்பேத்கர் நினைவு நாள் – எதிர்க்கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி.!

Advertisements

அம்பேத்கர் நினைவுநாளையொட்டித் தமிழ்நாடு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில். புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் என்று குறிப்பிட்டுள்ளார். அம்பேத்கரின் வாழ்வே ஒரு பாடம் என்றும், அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்தியில், சமத்துவத்தைச் சட்டங்களில் மட்டுமல்ல, மனிதர்களின் உள்ளத்திலும் நிலைநிறுத்த அயராது பாடுபட்ட சிந்தனையாளர் அம்பேத்கர் எனக் குறிப்பிட்டுள்ளார்..

பாஜகவின் அண்ணாமலை விடுத்துள்ள செய்தியில், தலைசிறந்த தேசியவாதி, சமூக நீதிக்கான புரட்சியை முன்னெடுத்துச் சென்றவர் அம்பேத்கர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாநில பாஜக தலைவர் நாகேந்திரன் விடுத்துள்ள செய்தியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், ஒன்றுபட்ட இந்தியா, ஏற்றத்தாழ்வற்ற ஜனநாயகம் என்ற கொள்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தியவர் அம்பேத்கர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *