திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் தி.மு.க. முப்பெரும் விழா இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இன்று மாலை நடக்க இருந்த நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று துரைமுருகன் தெரிவித்தார். சென்னையில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




