பூசாரிகளின் ஓய்வூதியம் உயர்வு..!

Advertisements

கிராமக் கோவில் பூசாரிகளின் ஓய்வூதியம் ஐயாயிரம் ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் 2500 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்து அறநிலையத்துறையின் சார்பில் தமிழ்நாடு கிராக் கோவில் பூசாரிகள் பேரவையின் மாநாடு சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராமக் கோவில் பூசாரிகளின் ஓய்வூதியம் ஐயாயிரம் ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் 2500 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் பூசாரிகளின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை ஆகியனவும் உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *