America Flight Accident : சிறிய ரக விமானம் கார் மீது மோதி விபத்து..!

அமெரிக்காவின் பிரேவர்டு நகரின் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம் கார் மீது மோதி விபத்துகுள்ளானது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் சிறிய ரக விமானத்தில் பயணித்துள்ளனர். இந்நிலையில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் விமானத்தைப் பிரேவர்டு நகரின் நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக தரையிறக்கினர். அப்போது, சாலையில் சென்ற கார் மீது விமானம் மோதியதில், காரில் இருந்த பெண் நபருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, விமானத்தில் பயனித்த 2 இளைஞர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.

பின்னர், இந்த சம்பவத்தைத் தகவலறிந்தக் காவல்துறையினர் காயமடைந்தப் பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *