
தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர் குன்றக்குடி அடிகளார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு இன்று என்றும், சோவியத் யூனியன் பயணத்தின் உந்துதலால், ‘குன்றக்குடிக் கிராமத் திட்டம்’ கொண்டுவந்த பொதுவுடைமைச் சிந்தனையாளர் அவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பகட்டுச் சம்பிரதாயங்களைத் தவிர்த்து மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர் என்றும், இந்தி எதிர்ப்புப் போரில் பங்கெடுத்த தமிழுணர்வாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகப் பேசிய பெருந்தகையாளர் என்றும் தெரிவித்துள்ளார்.
அவரது வழியில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.




