பிளாட்டை பூட்டி வைத்து ரகசிய வேலை.. 2 மாதத்தில் நடந்த விபரீதம்..!

Advertisements

ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றி வந்த முன்னாள் வேதியியல் ஆசிரியர் 35 வயதான இந்திரஜித் பிஷ்னோய் இதேபோல் கங்காசாகர் மாவட்டம் முக்லாவாவில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் 25 வயதான மனோஜ் பார்கவ் இருவருக்கும் ஏகப்பட்ட கடன் பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது. மாத சம்பளம் வாங்கி அவர்களது கடனை அடைக்கும் நிலையை இருவரும் கடந்து விட்டிருந்தனர் .

கடன் தொல்லை கழுத்தை நெரிக்க இருவரும் சேர்ந்து பணம் சம்பாதிக்க ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். அதற்காக டெல்லிக்கு சென்ற அவர்கள் போதைப் பொருள் தயாரிப்பதற்கான ரசாயனங்களை வாங்கி வந்துள்ளனர். போலீசுக்குத் தெரியாமல் போதைப் பொருள் தயாரிக்க தனியாக வீடு ஒன்றைத் தேடி வந்துள்ளனர்.

அதற்காக ஸ்ரீகங்கா நகர் பகுதியில், ரித்தி-சித்தி என்க்ளேவில் உள்ள டிரீம்ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு பிளாட்டை 2 மாதங்களுக்கு முன், மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்நிலையில், அவர்களது ரகசிய நடவடிக்கைகள் குறித்து அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. வீட்டிற்குள் இருந்து வித்தியாசமான வாசனை மற்றும் அளவுக்கு அதிகமான மின்சார உபயோகம் போன்றவை குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க அவர்கள் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து சோதனையிட்ட போது அதிர்ந்து போயினர்.

உடனே போதைத் தடுப்புக் பிரிவினரான என்சிபி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க அவர்களும் களத்தில் இறங்கினர். பிரேக்கிங் பேட் பாணியில் வேதியியல் துறை ஆசிரியர்கள் வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து உயர் ரக போதைப் பொருள் தயாரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *