
இந்திய கலாச்சாரம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் லோக்மாதா அஹில்யாபாய் ஹோல்கரின் அர்ப்பணிப்பு, நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாரத வரலாற்றில் மகத்தான தீர்க்கதரிசியாகத் திகழ்ந்த லோக்மாதா அஹில்யாபாய் ஹோல்கர் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவரது அறிவுத்திறன், கருணை மற்றும் பொதுநலனுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக, தேசம் முழுவதும் அவரை மரியாதையுடனும் கௌரவத்துடனும் நினைவுகூர்கிறது.
நாடு முழுவதும் உள்ள புனிதக் கோயில்கள் மற்றும் புனித யாத்திரைத் தலங்களைப் புனரமைத்தது முதல் அனைவருக்கும் நீதி மற்றும் நலனை உறுதி செய்தது வரை, அவர் ஈடு இணையற்ற பங்களிப்புகளைச் செய்தார் என்றார். மேலும் அவர் இந்தியாவின் சமூகம், கலாச்சாரம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது அர்ப்பணிப்பு, நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று தெரிவித்தார்.



