அன்புமணி சென்றதால் மீண்டும் பரபரப்பு..பாதியிலே எழுந்து வந்த ராமதாஸ்..!

Advertisements
மயிலாடுதுறையில் பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி சென்ற தகவலறிந்து 5 நிமிடங்களில் சுருக்கமாகப் பேசிவிட்டுப் புறப்பட்டார். மயிலாடுதுறையில் பாமக பொதுக்குழுக் கூட்டம் மாவட்டச் செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜி.கே.மணி, அருள்மொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கட்சியின் நிறுவனரான ராமதாஸ் இந்தக் கூட்டத்தில் பேசும்போது, தனது போராட்டத்துக்குப் பிறகுதான் மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக அறிவித்ததாகவும், காவிரிப் பாசன மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததாகவும் தெரிவித்தார்.
அவர் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே தைலாபுரம் வீட்டுக்கு அன்புமணி வந்ததை அறிந்ததும் இடையில் பேச்சை நிறுத்திவிட்டு அவர் புறப்பட்டுச் சென்றதால் பாமகவினர் ஏமாற்றமடைந்தனர்.
இந்தக் கூட்டத்தில் பாமக, வன்னியர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *