Armstrong Murder :ரவுடி சம்போ செந்தில் சிக்காமல் தப்பித்து வருவது எப்படி?- அதிர்ச்சி தகவல்!

Advertisements

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டார்.

ந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், மலர்க்கொடி, சதிஷ், ஹரிஹரன் உள்ளிட்ட வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ரவுடி சம்போ செந்திலை 10 தனிப்படைகள் அமைத்துத் தேடி வரும் போலீஸார் சம்போ செந்தில் போலீசாரிடம் சிக்காமல் தப்பித்து எப்படி? என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியிட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள சம்போ செந்திலின் கூட்டாளிகள் அவருடன் பேசுவதற்காகப் பிரத்யேக செல்போன்களை பயன்படுத்தி வருவதாகவும், கூட்டாளியின் பிரத்யேக செல்போனுக்கு தொடர்பு கொள்ளும் சம்போ செந்தில், அவர்களின் சொந்த மொபைல் மூலம் விரும்பும் நபருக்குப் போன் செய்து லவுடு ஸ்பீக்கரில் பேசுவதும் தெரிய வந்தது.

இப்படி பேசினால் சம்போ செந்தில் யாருடன் தொடர்பு கொள்கிறார் என்ற விவரங்களைப் பெற இயலாது எனப் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

வி.பி.என். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டெலிகிராம், இன்ஸ்டாகிராம் மூலம் மட்டுமே தனது கூட்டாளிகளுடன் சம்போ செந்தில் பேசி வருவதும் விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது.

தினந்தோறும் மதிய வேலைக்குப் பிறகே கூட்டாளிகளுடன் பேசி வரும் சம்போ செந்தில் வெளிநாட்டிலிருந்து கொண்டு அந்த நாட்டின் நேரத்திற்கு ஏற்றாற்போல் சம்போ செந்தில் பேசுகிறாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம், டெலிகிராம் நிறுவனங்களுக்குக் கடிதம் அனுப்பி சம்போ செந்திலுடன் தொடர்பு கொண்ட நபர்களின் முழு விவரங்களையும் போலீசார் கேட்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *