தமிழர்களின் பெருமையை நிலைநிறுத்துவோம் – முதல்வர் விஜய்!

முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதுடன், அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *