நடிகர் அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ திரைப்படம் – ரிலீஸ் தேதி அறிவிப்பு !

பிரபல நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும்  “ஜான் டோ” திரைப்படம் வரும் நவம்பர் 13 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

பிரபல நடிகர் அர்ஜுன் தாஸ் ‘ஜான் டோ’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில், அர்ஜுன் தாஸ் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் மதுமிதா இயக்கத்தில், இசையமைப்பாளர் முஜீப் மஜீத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில், சஞ்சனா நடராஜன் மற்றும் சிருஷ்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். அண்மையில் இப்படத்தின் முதல் பாடலான ‘நான் போதுமா’ வெளிவந்து அனைவரது கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், இத்திரைப்படம் வரும் நவம்பர் 13 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பிரபல நடிகர் அர்ஜுன் தாஸ் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அவரது ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *