ஜப்பான் ஓபன் டென்னிஸ் – டயானா ஷ்னைடர் சாம்பியன்!

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் டயானா ஷ்னைடர் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
டோக்கியோவில் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ரஷ்யாவின் டயானா ஷ்னைடர், கனடா வீராங்கனையான லேலா பெர்னாண்டஸ் உடன் மோதினார். இதில் சிறப்பாக விளையாடிய டயானா ஷ்னைடர் 6-4, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ரஷ்யாவின் டயானா ஷ்னைடர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *