முரசு புயல் – 3 துறைமுகங்களில் 5-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் உருவான முரசு புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளதால், வட தமிழக கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய 3 துறைமுகங்களிலும் 5-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் சீற்றமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே கடலில் உள்ளவர்கள் பாதுகாப்பாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயலின் நகர்வைக் கண்காணித்து வரும் வானிலை ஆய்வு மையம் மற்றும் துறைமுக நிர்வாகங்கள் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *