
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்துவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதிப்பங்கீடு இன்றும் முடிவாகவில்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, பேச்சுவார்த்தை குழு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இன்னும் இழுபறி நீடிக்கிறது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களில் போட்டியிட்டு, 2-இடங்களில் வென்றது.
2026 தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட அக்கட்சியினர் விரும்பிய நிலையில், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இணைந்துள்ளதால், தொகுதிகளை குறைத்துக் கொள்ள திமுக குழு கோரியுள்ளது. இதன் காரணமாக இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 5 தொகுதிகளை ஏற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்துவதாக தெரிவித்தார்.




