புஷ்பா- 2 பாடலுக்கு பாட்டியுடன் நடனமாடிய வாலிபர்!

Advertisements

சமீபத்தில் வெளியான ‘புஷ்பா-2’ படம் உலகளவில் மிகப்பெரிய ஹிட்டாகி ரூ.1,800 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற அங்கரோன் எனத்தொடங்கும் ஸ்ரீவள்ளி பாடலுக்கு அல்லு அர்ஜூன்- ராஷ்மிகாவின் நடனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து பெரும் வரவேற்பை பெற்றது.

இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் இந்தப் பாடலுக்கு ரீல்ஸ் நடனமாடி வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்கரோன் பாடலுக்கு ஒரு வாலிபர் தனது பாட்டியுடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், வயதான மூதாட்டி ஒருவர் அங்கரோன் பாடலுக்கு ராஷ்மிகாவை போன்று நடனமாடுகிறார்.

அவருடன் அவரது பேரன் இணைந்து நடனமாடும் காட்சிகள் பயனர்களைக் கவர்ந்துள்ளது.

என் ஸ்ரீவள்ளியுடன் என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், அந்தப் பாட்டி மிகவும் அழகாக நடனமாடுகிறாரெனப் பதிவிட்டிருந்தார்.

மற்றொரு பயனர், வயது என்பது வெறும் எண் தான், மகிழ்ச்சி எந்த வயதிலும் வரலாம் என்பதற்கு இந்த வீடியோ உதாரணம் எனப் பதிவிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *