
சங்கரன்கோவில் அருகே தாழ்வாக சென்ற மின்சார கம்பியில் சிக்கி மூன்று பசுமாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இலவன்குளம் சாலையில் உள்ள குருநாதன் என்பவருடைய இரண்டு பசு மாடுகளும் கடல் என்பவருடைய ஒரு பசு மாடும் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக சென்றுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக அப்பகுதி விவசாய நிலங்களில் உள்ள மின்கம்பங்களில் மின் கம்பிகள் உறுதி இழந்து தாழ்வாக செல்கின்றன.
இதுகுறித்து மின்வாரியத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பசு மாடுகள் தாழ்வாக சென்ற மின்சாரக் கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


