முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது இதன்படி ஹராரேயில், இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 13 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.
இதில், அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 50 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன்மூலம், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


