பொட்டியை கட்டும் ஆளுநர் ஆர்என் ரவி.. தமிழகத்தின் அடுத்த ஆளுநர் யார்?

தமிழக ஆளுநர் ஆர்என் ரவியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்தோடு நிறைவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டின் அடுத்த ஆளுநர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழக ஆளுநராக ஆர்என் ரவி பதவி வகித்து வருகிறார். ஆளுநர் ஆர்என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர்ந்து ஏழாம் பொருத்தமாக உள்ளது.

திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவருமே தொடர்ந்து ஆளுநர் ஆர்என் ரவியை விமர்சித்து வருகின்றனர். ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.தொடர்ந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் கிடப்பில் போடப்படுவது தொடர்பாக, ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் ஆளுநருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம், மாநில அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது.ஆளுநர் ஆர்என் ரவி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவர். வெளியுறவுத்துறை அதிகாரியாக பணியாற்றியுள்ளார் ஆர்என் ரவி. நாகாலாந்து மற்றும் மேகாலாயா ஆகிய மாநிலங்களிலும் ஆளுநராக பணியாற்றியுள்ளார் ஆர்என் ரவி. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தமிழக ஆளுநராக பாஜக அரசால் நியமிக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *