முதல் இந்தியராகச் சாதனை – பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்து!

Advertisements

நார்வே செஸ் 2026  தொடரில் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026  தொடரில் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா பட்டம் வென்றது குறித்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் மேலும் புதிய சாதனைகளைப் படைத்திட தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *