
ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் சீன தைபேயின் சுங் ஷோ யூனை நேர் செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் மாளவிகா பன்சோத் வெற்றி பெற்றுள்ளார்.
பிரான்சில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவின் மாளவிகா பன்சோத், சீன தைபேயின் சுங் ஷோ யூனுடன் மோதினார்.
போட்டியில், மிகவும் சிறப்பாக விளையாடிய மாளவிகா பன்சோத் 2 – 0 என்ற நேர் செட் கணக்கில் சுங் ஷோ யூனை வீழ்த்தினார். இதன்மூலம், அவர் அடுத்து சுற்றுப் போட்டிக்கு முன்னேறினார்…


