T20 WC 2026: ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய இந்திய அணி.!

Advertisements

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்  8 சுற்று போட்டியில் ஜிம்பாப்வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்  தொடரின் சூப்பர்  8 சுற்று போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம், 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *