
லஞ்சம் வாங்கியதாக நாடாளுமன்ற பெண் எம்.பி மஹுவா மொய்த்ரா மீது பரபரப்பு குற்றச்சாட்டு.
கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக நாடாளுமன்ற பெண் எம்.பி மஹுவா மொய்த்ரா மீது பரபரப்பு குற்றச்சாட்டு. இவரின் வழக்கரிஞர் திடீர் விலகல்.
கடந்த சில தினங்களாக பாராளுமன்றத்தில் அனல் பறக்க பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோர் மீது குற்றம் சாட்டி பெரிய சர்ச்சையை உண்டு பண்ணியிருந்த நிலையில், மஹுவா மொய்த்ரா மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவரின் வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் இந்த வழக்கிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்ல பாஜக எம்பியான பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோர் மஹுவா மொய்த்ரா மீது குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது பாராளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக கேள்விகள் கேட்பதற்கென்றே இவர் லஞ்சம் வாங்குவதாகவும் அதனாலேயே இவர் தேவையில்லாமல் பாஜக மீது பழிபோட்டு சர்ச்சைகளை கிளப்புகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தவிர, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வுக்கும் அவர் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘மக்களவையில் மஹுவா மொய்த்ரா இதுவரை கேட்டுள்ள, 61 கேள்விகளில், 50 கேள்விகள், அதானி குழுமம் தொடர்பான. அதானி குழுமம் தொடர்பாக இந்த கேள்விகளை எழுப்ப, மற்றொரு நிறுவனத்திடம் இருந்து அவர் லஞ்சம் வாங்கியுள்ளார். இதுதொடர்பான ஆதாரங்கள் உள்ளன’ என்றும் கூறியிருந்தார்.
அது தொடர்பான ஆதாரங்களையும் அவர் இணைத்திருந்தார். புகாரை ஏற்று அது குறித்து பரிசீலித்த மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் இருப்பதாகவும் இதுகுறித்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு அனுப்பியும் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு மொய்த்ரா மீதான புகாரை வரும் 26ஆம் தேதியன்று விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


