76வது குடியரசு தினத்தைமுன்னிட்டு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து!

Advertisements

நம் நாட்டின் 76-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார்.

அந்தந்த மாநிலங்களில் கவர்னர்கள் தேசிய கொடியை ஏற்றினர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தனது குடியரசு தின வாழ்த்துச் செய்தியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “குடியரசு தின வாழ்த்துக்கள்.

இன்று, நாம் ஒரு குடியரசு நாடாக 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடுகிறோம். நமது அரசியலமைப்பை உருவாக்கி, நமது பயணம் ஜனநாயகம், கண்ணியம் மற்றும் ஒற்றுமையில் வேரூன்றியுள்ளது என்பதை உறுதி செய்துள்ள அனைத்து பெண்கள் மற்றும் ஆண்களுக்குத் தலைவணங்குகிறோம்.

இந்தச் சந்தர்ப்பம் நமது அரசியலமைப்பின் இலட்சியங்களைப் பாதுகாப்பதற்கும், வலுவான மற்றும் வளமான இந்தியாவை நோக்கி உழைப்பதற்கும் நமது முயற்சிகளை வலுப்படுத்தட்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *