Massage Center: மஜாவாக நடந்த விபச்சாரம்!

Advertisements

மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் தொழில் நடத்தி வந்த பெண் உட்பட 3 பேரர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளளனர்.

தமிழகத்தில் புற்றீசல் போல் மசாஜ் சென்டர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக அவ்வப்போது போலீசாருக்கு வரும் தகவலை அடுத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மதுரை சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் மசாஜ் சென்டர் ஒன்று இயங்கி வருகிறது.

Advertisements

இங்கு மசாஜ் என்ற பெயரில் விபச்சார தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியானது.

இதனையடுத்து மசாஜ் சென்டர் நடத்தி வந்த வத்தலகுண்டு சாமிநாதன், அவரது கூட்டாளிகள் சென்னை ஜெயபிரகாஷ் மற்றும் பெண் ஒருவரை போலீசார்  மடக்கிப் பிடித்தனர். மேலும், பெண் ஒருவர் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *