Maha Shivratri 2024: சிவாலய ஓட்டம் ஓடும் பக்தர்கள் கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம் சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம் 12சிவாலயங்களிலும்  குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப் பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹாசிவராத்திரியையொட்டி  பிரசித்தி பெற்ற   சிவாலய ஓட்டம் நடைபெறுவது வழக்கம். குறிப்பாகத் திருமலை மஹாதேவர் திருக்கோவிலில் துவங்கி  திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பந்நிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைகாடு, திருவிதாங்கோடு, திருபன்றிகோடு,  திருநட்டாலம் வரையிலான பன்னிரெண்டு சிவாலங்களில் பக்தர்கள் விரதமிருந்து சிவாலய ஓட்டம் ஓடுவார்கள்.

இந்த ஆண்டு மஹா சிவராத்திரி வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளதையடுத்து வரும் 7ஆம் தேதி சிவாலய ஓட்டம் திருமலை மஹாதேவர் திருக்கோவில் துவங்கவுள்ளது இதையடுத்து பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுபடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுப்புகள் அமைக்கபட்டும் கடும் வெயிலினால் பக்தர்களைப் பாதுகாக்க தற்காலிக மேற்கூரைகள் அமைக்கும் பணியும் நடைபெற்றுவருகிறது.

இந்தநிலையில் கடந்த வருடம் சிவாலய ஓட்டம் நிடழ்ச்சியில் எந்த ஆலயங்களிலும் இந்தை சமய அறநிலைத்துறை சார்பில் போதிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளாததால் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவிலிருந்து அதிகளவில் பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்பதையடுத்து 12சிவாலயங்களிலும் போதிய குடிநீர் கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவேண்டுமெனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *