Kuppanatham Dam: விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பனத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன்தண்ணீரை திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பனத்தம் அணையின் முழு கொள்ளளவான 59 அடியில் தற்போது நீர் இருப்பு 47 அடியாக உள்ள நிலையில் விவசாயிகள் இரண்டாம் போகம் நெல் சாகுபடி செய்து தண்ணீரின்றி நெற்பயிர்கள் வாடி வருவதால் அணையிலிருந்து தண்ணீர் விட விவசாயிகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் அணையிலிருந்து 02-03-24 முதல் 26-03-24 வரை வினாடிக்கு 152 மி.க விகிதம் 25 நாட்களுக்கு விவசாய பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் திறந்து வைத்தார். இதன் மூலம் செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 47 ஏரிகள் நிரம்பி சுமார் 9800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்நிகழ்ச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன் உட்பட திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *