
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நிதி அகர்வால் ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘தி ராஜா சாப்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் வரவேற்பை பெற்ற பிரபாஸ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் தி ராஜா சாப். இந்த படத்தில், நிதி அகர்வால் முக்கிய கேரகடரில் நடித்துள்ளார்.
இந்த படத்தின், ‘சஹானா சஹானா’ பாடல் வெளியீட்டு விழா டிசம்பர் 17ம் தேதி ஹைதராபாத்தில் லூலூ மாலில் நடைபெற்றது. விழா முடிந்து நிதி அகர்வால் வெளியே வந்தபோது, அவரைப் பார்ப்பதற்காகவும் புகைப்படம் எடுப்பதற்காகவும் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர்.சுற்றிலும் மக்கள் கூடியதால், அவர் தனது காரை நோக்கி செல்ல முடியாமல் சிரமப்பட்டார்.
கூட்ட நெரிசலில் சிக்கிய நிதி அகர்வால், மிகுந்த வருத்தத்துடனும் அசௌகரியத்துடனும் காணப்பட்டார். நிதி அகர்வால் இப்படி முற்றுகையிடப்படுவதைப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இது ரசிகர் மனப்பான்மை அல்ல, அராஜகம். ஒருவரின் பாதுகாப்பிற்கு மதிப்பளிக்காத செயல் இது. திரை நட்சத்திரங்கள் ஒன்றும் பொதுச் சொத்து அல்ல;
அவர்களுக்கும் அடிப்படை மரியாதை தேவை. இத்தகைய செயல்கள்தான் கூட்டத்தைக் கண்டாலே வெறுப்பை வரவழைக்கின்றன என்றும் நெட்டிசன்கள் கண்டித்துள்ளனர்.ரசிகர்களின் இந்த நடவடிக்கைக்கு பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, ‘ஆண்கள் ஓநாய்களை போன்றவகள்.
ஏனென்றால், ஓநாய்கள் கூட்டமாக வேட்டையாடும்.ஓநாய் போன்ற மனநிலை கொண்ட ஆண்கள்தான் கூட்டமாக சேர்ந்து கொண்டு, பெண்களை வேட்டையாட முயல்கின்றனர். கடவுள் ஏன் இந்த ஓநாய்களை வேறு கண்டத்துக்கு அனுப்பக் கூடாது ‘என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.+

