Kanniyakumari: தேர்தலைப் புறக்கணித்துப் பதாகை வைப்பு!

Advertisements

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே 20ஆண்டுகளாக  சாலை செப்பனிடாதநிலையில்  பலபோராட்டங்கள்  நடத்தியும் கண்டுகொள்ளாத  பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஊர்மக்கள் பாராளுமன்ற தேர்தலைப் புறக்கணித்துப் பதாகை வைத்தால் பரபரப்பு நிலவியது.

கன்னியாகுமரி மாவட்டம்  ஆற்றூர் பேருராட்சிக்குட்பட்ட 4வது வார்டில் வெள்ளங்குழி பகுணியிலிருந்து  மூவாற்றுமுகம் செல்லும் சாலையைச் சுமார் 20வருடத்திற்கு மேல் செப்பனிடபடாமல் சாலையிருந்த அடையாளமே இல்லாமல் குண்டும் குழியுமாகக் காட்சியளித்து வருகிறது.

சுமார் 100குடும்பங்களுக்கு மேல் வசித்துவரும் இப்பகுதியில் மழைகாலங்களில்  அவசரதேவைகளுக்கு கூட வாகனங்களில் சென்றுவரமுடியாத நிலை ஏற்படுவதாகவும் பலமுறை மாவட்டநிர்வாகம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாதால்   கடந்த 2021ஆம் ஆண்டு இப்பகுதி மக்கள்  சாலையில் உள்ள குழிகளில் வாழைநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து  2022, 2023 ஆம் ஆண்டுகளில்  பேரூராட்சி அலுவலகத்தை இருமுறை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டநிலையில் பேரூராட்சி நிர்வாகம் எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளித்ததையடுத்து  போராட்டங்கள் கைவிடபட்டது. இந்தநிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில்  அம்ருத் குடிநீர் திட்டக் குழாய் பதிப்பதற்காகக் கடைசியாக 4மாதங்கள் அலகாசம் கேட்கபட்டிருந்தநிலையில் தற்போது குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து இரண்டு மாதங்களாகியும் பணிகள் துவங்காததை கண்டித்து.

இப்பகுதி மக்கள்  வரும் வினோத முடிவைக் கையாண்டுள்ளனர். குறிள்பாக வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த அரசியல் கட்சியனரும் தங்கள் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட கூடாது எனவும்  இப்பகுதிமக்கள் தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளதாகவும் கூறி ஊர்மக்கள் ஒன்றுதிரண்டு மூவாற்றுமுகம் சந்திப்பில் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். மேலும் இந்த எச்சரிக்கையும் மீறித் தங்கள் பகுதிக்குள் எந்த அரசியல் கட்சியாவது வாக்கு சேகரிக்க வந்தால் பெண்கள் அடித்து விரட்டுவார்கள் எனவும் ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *