தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.!

மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவே வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் முரசொலி மாறனின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, எடப்பாடி பழனிச்சாமி பாஜகவின் கொத்தடிமையாக உள்ளதாகக் கூறினார்.  தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவே வென்று ஆட்சியமைக்கும் என்றும் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வந்தாலும் அவரால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது என்று தெரிவித்தார். பாஜகவினர் வாக்குச்சாவடி முகவர்களையே நியமிக்கத் தடுமாறுவதாகவும் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *