Global Innovation Index: 40-ஆவது இடம் பிடித்த இந்தியா!

Advertisements

உலகளாவிய புத்தாக்கப் பட்டியலில், 2023 ஆம் ஆண்டும், 40-ஆவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

டெல்லி: உலக அறிவுசார் சொத்துரிமை நிறுவனம் ஆண்டுதோறும் உலகளாவிய  புத்தாக்கப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றதுக்கான புதுமையான முன்னெடுப்புகளை அடிப்படையாகக் கொண்டு உலக நாடுகளைத் தரவரிசைப்படுத்தி  பட்டியலானது வெளியிடப்படுகிறது. உலக நாடுகள் கவனம் செல்லுத்தவேண்டிய துறைகள், அதற்குண்டான கொள்கைகள்குறித்து முடிவெடுக்க முனைவதாக இருக்கும்.

இவ்வருடம் 132 நாடுகள் இப்பட்டியலில் இடம் பெற்றது. இத்தர வரிசைப் பட்டியலில் இந்தியா 40-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.உலகளாவிய புத்தாக்கப் பட்டியலில் கடந்த 2015-ஆம் ஆண்டு 81-ஆவது இடத்திலிருந்தது. தற்போது 2023, எட்டு வருடங்களில் முன்னேறி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின்  மகத்தான அறிவுசார் மூலதனங்கள், வலிமையான புத்தொழில் அமைப்புகள் ஆகியவற்றின் பங்களிப்பு இவற்றின் காரணங்களால் இது சாத்தியமாயிற்று  என்று குறிப்பிட்டுள்ளது, நிதி ஆயோக்  நிறுவனம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *