கோவை, நீலகிரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில், கோவை, நீலகிரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அதன்படி, கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார் மாவட்டங்களில் ஒருசில இடங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான மழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *