மேற்குத் திசைக் காற்றின் காரணமாக இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த நான்கு நாட்களுக்குத் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இலேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகக் கோவை மாவட்டம் சின்னகல்லாறில் 9 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வால்வாறையில் 7 செண்டிமீட்டரும், சோலையாறு, சின்கோனா, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய இங்களில் ஐந்து செண்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

