1980-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகக் காளி என்ற படத்தின் மூலம் கவிஞராக வைரமுத்து அறிமுகமானார்.இந்தப் படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார்.
இசையமைப்பாளர் இளைரயாஜா, கவிப்பேரரசு வைரமுத்து ஆகிய இருவரும் தற்போது ஒன்றாக இல்லை என்றாலும், இவர்கள் இணைந்து பணியாற்றிய காலக்கட்டத்தில் இவருக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்துள்ளது. அப்போது ரஜினிகாந்த் நடித்த ஒரு படத்தின் பாடலில் இளையராஜா சொல்லைக் கேட்காமல், அந்தப் பாடலில் ஒரு சிறு மாற்றம் கூடச் செய்யாமல் இருந்துள்ளார் வைரமுத்து. அது என்ன பாடல் தெரியுமா?
தமிழ் சினிமாவில் கவிப்பேரரசு என்று போற்றப்படுவர் வைரமுத்து பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்கை கொடுத்துள்ள இவர், 1980-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகக் காளி என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராகத் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இந்தப் படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார்.
அதன்பிறகு 1986-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் புன்னகை மன்னன் திரைப்படம் தான் இவர்கள் கூட்டணியில் வெளியாகக் கடைசி படம் என்று சொல்லலாம். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாக இந்தப் படத்தில், அனைத்து பாடல்களையுமே வைரமுத்து தான் எழுதியிருந்தார். அதன்பிறகு பிரிந்த இவர்கள், இன்றுவரை இணைந்து பணியாற்றவே இல்லை. சமீபத்தில் கூட வைரமுத்து இளையராஜா குறித்து விமர்சனங்களைக் கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த 1985-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் சிகப்பு மனிதன் படத்தில், கவிப்பேரரசு வைரமுத்து ஒரு பாடலை எழுதியுள்ளார். ரஜினிகாந்த், அம்பிகா, பாக்யராஜ், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில், வாலி, வைரமுத்து, மேத்தா, புலமைப்பித்தன், கங்கை அமரன் ஆகியோர் தலா ஒரு பாடல்கள் எழுதியிருந்தனர்.
இந்தப் படத்தில் வரும் ‘காந்தி தேசமே காவல் இல்லையா’ என்ற பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். இந்தப் பாடல் வந்து 30 வருடங்களை நெருங்கி இருந்தாலும், இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருந்துகிற மாதிரி அமைந்திருக்கிறது. இந்தப் பாடலில், முதலில் பல்லவியை மாற்றச் சொன்ன நிலையில், அடுத்து பதவியின் சிறையில் பாரதமாதா பரிதவிக்கிறாள், ‘சுதந்திரதேவி, சுயநலபுலிகளின் துணி துவைக்கிறாள்’ என்ற வரியை மாற்றுமாறு சொல்லியிருக்கிறார்கள்.
இந்த மொத்த பாட்டுக்கும் இந்த வரிகள் தான் உயிர்நாடி, இதை எடுத்துவிட்டு என்ன போடுவது என்று கேட்ட வைரமுத்து வரிகளை மாற்ற முடியாது என்று கூறியுள்ளார். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், இசையமைப்பாளர் இளையராஜா என அனைவருமே வைரமுத்துவிடம் கேட்க அவரோ கடைசிவரை வரிகளை மாற்றஒப்புக்கொள்ளவில்லை. அதன்பிறகு படக்குழுவினர் இந்தப் பாடலில் எந்த வரியையும் மாற்றம் செய்யாமல், அப்படியே படமாக்கியுள்ளனர். இந்தப் பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.