தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் மோடி..!

Advertisements

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். மேலும் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளனர்.

முன்னதாக இன்று கேரள மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, 3 அம்ரித் பாரத் ரெயில்கள் உள்பட 4 புதிய ரெயில்களின் சேவைகளை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பிரதமர் மோடி கேரளாவில் இருந்து சென்னை புறப்பட்டார்.

பிரதமர் மோடி 2.15 மணிக்கு சென்னைக்கு வருவார் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவரது வருகையில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், 2.40 மணியளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், டி.ஜி.பி. வெங்கட்ராமன், அமைச்சர் தா.மோ.அன்பரசன், பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. தலைவர்கள் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். அவரது வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதுராந்தகம் வர உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *