Lok Sabha Elections 2024: தமிழ் மாநில காங்கிரஸ் முதல் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு!

Advertisements

பா.ஜ.கக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.ஈரோடு தொகுதியில் விஜயகுமார், ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில், வேணுகோபாலும் போட்டியிடுகின்றனர்.

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.  அந்த வகையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது முதல் கட்டமாக 9 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலைப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.கக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள்குறித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று அறிவித்தார்.

ஈரோடு தொகுதியில் விஜயகுமார், ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில், வேணுகோபாலும் போட்டியிடுகின்றனர்.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரசுக்கு எதிராகத் தி.மு.க. வேட்பாளர்கள் களம் காண்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *